ஞாயிற்றுக்கிழமை, 08 மே 2011 17:29
தசாவதாரம் படத்தில் கெஸ்ட்ரோலில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, காஞ்சிவரம் மூலம் நாயகியாக பளிச்சிட்ட நடிகை ஷம்மு, சங்க கால படமொன்றில் வனப்பகுதி சூட்டிங்கில் ஆடையில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்.
டைரக்டர் கற்றது தமிழ் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்துடன் அறிமுக இயக்குனர் ம.செந்தமிழன் இயக்கும் புதிய படம் பாலை.
வரலாற்றுப் படம் என்றாலே மன்னர், அரண்மனை, போர்க்களம் என்ற நிலைமையை மாற்றும் வகையில் அதற்கும் முந்தைய காலத்தில் நடந்த சம்பவங்களை படமாக்கி, பதிய வைக்க வேண்டும் என்ற வித்தியாசமான எண்ணத்துடன் பாலை படத்தினை இயக்கி வருகிறார் செந்தமிழன். அந்தக் காலத்தில பயன்பட்ட வில்-அம்பு, ஈட்டி, கல் கத்திகளை உருவாக்கியிருக்கோம். போர்க் காட்சிகள் மிரட்டலா வந்துக்கிட்டிருக்கு.
காதல், காமம், வீரத்தை மரபு மணம் மாறாமல் காட்டப் போறோம். இது பார்வையாளர்களுக்குப் புது அனுபவதைக் கொடுக்கும் என நினைக்கிறேன், என்று சொல்லும் செந்தமிழன், இந்த படம் தொல்குடி மக்களைப் பற்றியது என்பதால் இருளர் சமூகத்தை சேர்ந்த ஆண்கள், பெண்களை முக்கிய ரோல்ல நடிக்க வைத்திருக்கிறாராம்.
படத்தின் நாயகியாக நடிகை ஷம்மு நடிக்கிறார். நாயகனாக சுனில் என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்கள் தவிர படத்தில் தோன்றும் பாத்திரங்களில் பல பேர் புதுமுகங்கள் என்பதையே ஹைலைட்டாக சொல்கிறது பாலை படக்குழு. கதைப்படி நடிகை ஷம்மு ஆடை எதுவும் அணிந்திருக்க மாட்டாராம்.
சங்க காலத்து பெண்கள் மானத்தை காக்க அணிந்திருந்த இலை தழைகளையே ஷம்மு ஆடையாக அணிந்திருக்கிறார். தஞ்சை பகுதியில் இப்படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. சூர், கொடைக்கானல், பழனி, சத்தியமங்கலம், ஈரோடு, தஞ்சாவூர் என இன்றைய நாகரீகங்கள் போய் சேராத வனப்பகுதிகளைத் தேடித் தேடி கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் டைரக்டர் செந்தமிழன்.
நாட்டுப்புற பாடல், முதுமக்கள் தாழி, கல் கத்திகள் என பழங்குடி மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்பட்ட அத்தனை விஷயங்களையும் படத்தில் புகுத்தியிருக்கும் டைரக்டர் செந்தமிழ், இந்த படத்திற்காக கடந்த 6 ஆண்டுகளாக பழந்தமிழர்கள் வாழ்க்கை பற்றி ஆய்வு செய்திருக்கிறார் என்பதோடு, படத்தின் வசனங்களிலும் பல்வேறு தமிழ் இலக்கியங்களில் இருந்து தேடிப்பிடித்து வார்த்தைகளை கோர்த்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
வரலாற்றுப் படம் என்ற பெயரில் கோடி கோடியாய் பணம் செலவழித்து பிரமாண்ட செட் போட்டு எடுக்கப்படும் படங்களுக்கு மத்தியில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்குடி மக்களின் வாழ்கையை படமாக்க அந்த காலத்து கிராமத்தை நவீன யுத்தியுடன் செட் போட்டு படமெடுத்துக் கொண்டிருக்கும் புதுமுகம் செந்தமிழுக்கு உரிய மரியாதை பாலை ரீலிசுக்கு பிறகு கிடைக்கும் என நம்புவோம்.

Geen opmerkingen:
Een reactie posten