dinsdag 23 november 2010

வல்லவனுக்கு வல்லவன்



முதலையின் பிடியிலிருந்து தப்பிய யானை!
நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே, அளவில் மிகப்பெரியது யானைதான்.

அதன் கம்பீர தோற்றத்தையும் பலத்தையும் கண்டு மிரளாத மனிதர்களும் (பாகனைத் தவிர) இல்லை. ஏனைய விலங்குகள் கூட அதனைக்கண்டால் பயத்துடனேயே விலகிச் சென்று விடுவதுண்டு.

யானை நிலத்தில் பலசாலி என்பது போல் நீரில் பலசாலி முதலையார் தான்.

ஆனால் முதலையிடம் சண்டையிட்டுத் தப்பித்துச் சென்ற யானையொன்றின் புகைப்படங்களை அண்மையில் செம்பியா எனும் நாட்டின் புகைப்படக்கலைஞர் ஒருவர் தனது கெமராவில் 'க்ளிக்' பண்ணியிருக்கின்றார்.

தாய் யானை ஒன்றும் அதன் குட்டியும் ஆற்றங்கரையில் நீர் அருந்திக் கொண்டிருக்கும் பொழுது முதலையொன்று தாய் யானையின் தும்பிக்கையை கௌவிப் பிடித்துள்ளது.

எனினும் யானை தனக்கே உரிய பலத்தால் முதலையைத் தாக்கி அதனிடமிருந்து தப்பிச் செல்லும் காட்சியைத் தான் அவர் பிரமாதமாகத் தனது கெமராவில் பதிந்து கொண்டிருக்கின்றார்,





Geen opmerkingen:

Een reactie posten