donderdag 31 maart 2011

பாம்பிடம் சிக்கிய தவளை தப்புமா ? தப்பினால்..

31 March, 2011 by admin
9 நிமிட இந்தக் காணொளியை முதலில் முடியும்வரை பாருங்கள்:

பொதுவாக பாம்பிடம் சிக்கும் தவளையும், எலியும் வாழ்ந்ததா சரித்திரம் இல்லை என்பார்கள். அகப்பட்ட பிராணியை விழுங்குவதில் பாம்பு மிகவும் சாதூரியமானதும், பலமானதும் கூட. ஒருமுறை அது விழுங்க ஆரம்பித்தால் அது நினைத்தால் கூட அதனை நிறுத்தமுடியாது. என்னடா பஞ்ச் டயலக்கா இருக்கு என்று பார்க்கிறீர்களா ? அதுதான் உண்மை. ஆனால் இங்கே இருக்கும் பாம்பும் தவளையும் சற்று வித்தியாசம். தவளையின் கால் முதல் தலைவரை விழுங்கிய பாம்பு, திடீரென தண்ணீருக்குள் சென்றதால், திரும்பவும் கரையை அடைய முயற்ச்சிக்கிறது. அதனை சாதகமாகப் பயன்படுத்திய தவளை, அருகில் இருக்கும் கற்களை தனது காலால் கவ்வி தன்னை பாம்பின் வாயில் இருந்து வெளியே எடுக்க முனைகிறது.

இப் போராட்டத்தில் தவளை 90% வெற்றியக் கண்டது. முழுமையாக வெளியே வர முற்படும்போது, மின்னல் வேகத்தில் எங்கிருந்தோ வந்த வேறு பாம்பு ஒன்று அத் தவளையைக் அலேக்காக கவ்விச் செல்கிறது. வேறு பாம்பிடம் தனது இரையைப் பறிகொடுத்தோமே என இப் பாம்பு நாணிக் குறுகி கரை ஒதுங்குகிறது. இதனைத் தான் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை, இல்லை இல்லை வாய்க்கு எட்டியது குடலுக்கு எட்டவில்லை என்பார்களோ...

Geen opmerkingen:

Een reactie posten