விண்வெளியில் பெரிய கறுப்பு ஓட்டைகள் நட்சத்திரங்களை விழுங்குவது உண்டு. இந்த அரிய காட்சியை இதுவரை நாம் கண்டது இல்லை.
தற்போது முதல் முறையாக நட்சத்திரத்தை விழுங்கும் கறுப்பு ஓட்டையை விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.
உலக அளவில் வெளியான முதல் படம் இதுவாகும். இந்த நட்சத்திரத்தை விழுங்கும் நிகழ்வு 39 லட்சம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் நிகழ்ந்துள்ளது. விண்வெளி ஆய்வாளர்கள் சக்தி வாய்ந்த நாசா நுண்ணோக்கி மூலம் இதனை படம் பிடித்துள்ளனர்.
ஆச்சரியம் தரும் வகையில் அவர்கள் தீவிரமான எக்ஸ்ரே ஒளி வீச்சுகளையும் பார்த்தனர். அப்போது நட்சத்திர மண்டலத்தில் சூரியன் போன்ற மிகப் பெரிய நட்சத்திரம் பெரும் கறுப்பு ஓட்டையில் மூழ்குவதையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.
பெரும் கறுப்பு ஓட்டைகள் கவர்ந்து இழுக்க கூடிய ஈர்ப்பு சக்தியை அதிகம் கொண்டதாகும். அந்த கறுப்பு ஓட்டைகள் ஈர்த்த நட்சத்திரத்தை மெல்ல சாப்பிட்டு விடும் தன்மை கொண்டது ஆகும்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசியர் டேவிட் பர்ரோஸ் தலைமையிலான குழு இந்த அரிய நிகழ்வை படம்பிடித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten