மின்விளக்குகள் என்றாலே எமக்கு நினைவுக்கு வருவது இரவுகள்தான். பகல் நேர சூரிய விளக்கினை ஈடு செய்வதென்னவோ இவ்இரவு நேர மின்விளக்குகள் தான்.
ஒரு மின்விளக்கு நூறு ஆண்டுகளையும் கடந்து இன்னும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். இந்த பழைமை வாய்ந்த அதிசய மின் விளக்கு அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள லிவர்மோர் தீயணைப்பு நிலைய வண்டியில் பொருத்தப்பட்டு உள்ளதாம்.
இந்த அதிசய மின் விளக்கை அடோல்ப் சைலெட் என்ற கண்டுபிடிப்பாளர்தான் உருவாக்கி இருக்கிறார். இந்த விளக்கில் என்ன சிறப்பு என்றால் இந்த விளக்கை உருவாக்க இருபத்தி எட்டு மாதங்கள் (2.4 வருடங்கள்) ஆகியதாம்.
அது மட்டும் இல்லாது இந்த விளக்கைப் போன்று மற்றொரு விளக்கை எப்பொழுதும் யாரும் உருவாக்கவே இயலாத வகையில் இந்த விளக்கைத் தயாரிக்க உதவும் குறிப்புகளை இந்த அடோல்ப் சைலெட் எரித்துவிட்டாராம். இதை ஒரு மிகப்பெரிய சவாலாக எண்ணி அமெரிக்காவில் ஒரு குழு பல வருடங்களாக இந்த விளக்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இதுவரை வெற்றிபெற இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதன் முதலில் ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்றாம் ஆண்டு (1901) எரியத் தொடங்கி இன்றுடன் நூற்றிப் பத்து வருடங்களாகியும் (110) இன்னும் எந்தவித தடங்களும் இன்றி எரிந்துகொண்டே இருக்கிறதாம். இந்த அதிசயத்தை பார்க்க வரும் மக்களின் எண்ணிக்கை மட்டும் நாள் ஒன்றிற்கு பல ஆயிரங்கள். |
Geen opmerkingen:
Een reactie posten