zondag 23 oktober 2011

இறந்தும் பிரியாத காதலர்கள்(

(படங்கள் இணைப்பு)
சுமார் 1500ஆண்டுகளுக்கு முன்னர் இறந்ததாகக் கருதப்படும் இரு காதலர்களின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக் கூடுகளை இத்தாலிய மாளிகையில் உள்ள புதைகுளியில் இருந்து வேலையாட்கள் கண்டெடுத்தனர்.



இவர்கள் மரணிக்கும் கடைசித்தருவாயில் தங்களது கைகளை பிடித்தவ வண்ணம் இருந்துள்ளனர். அவர்கள் இறந்த அதேநிலையில் புதைகுழியில் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

இத்தாலியின் மொடெனா மாளிகையின் சுவர் அருகில் உரோம சாம்ராஜ்யத்தில் இறுதிக் காலப்பகுதியில் அரச குடும்பத்தினர் இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இந்த காதலர்களின் எலும்புக் கூடு தற்போது ஒரே பக்கத்தை பார்ப்பதாக உள்ளது.

அது அவ்வாறு இல்லை எனவும் பெண் தனது காதலனை அன்போடு பார்த்த வண்ணம் இருந்திருக்க வேண்டும் அல்லது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு இருந்திருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காலப்போக்கில் உடல் சிதைவடையும் போது ஆணின் முதுகெழும்பு சிதைவடைந்ததால் தலைஓடு திரும்பி இருக்கலாம் என கருதப்படுகிறது. கி.பி 500ம் ஆண்டில் இச்சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என புதைபொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
23 Oct 2011

Geen opmerkingen:

Een reactie posten