இதற்கு முன்னர் யாரும் பார்த்திராத மனித உருவத்தை பெற முனைந்திருக்கும் Zombie Boy , பச்சை குத்திய தோற்றத்துடன் முற்றிலும் மாறுபட்ட ரீதியில் தோன்றுகிறார்.
ஆனால் இவருக்கு பச்சை குத்தப்படவில்லை, ஒரு திரவத்தை நெஞ்சில் பூசியவுடன் அது ஒரு tattoo போன்று உருவாகிறது. துணியில் அதே போன்றதொரு திரவத்தை பூசியவுடன் மேலுமொரு பயங்கர உருவம் தெரிகிறது.
இப்படி சில பல காட்சிகளின் பின்னர் உடம்பு முழுவதும் வண்ண வேலைப்பாடுகளுடன் ஒரு கொடூர பார்வையுடன் தெரிகிறார். இறுதியில் தான் தெரிகிறது இவையனைத்தும் DREMABLEND என்ற அழகு சாதனப்பொருளின் விளம்பரத்திற்கு உருவாக்கப்பட்டவை என்பது.
Geen opmerkingen:
Een reactie posten